பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
மாவட்ட மேசை பந்து போட்டிக்கு ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி தகுதி
மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டிக்கு கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் வேதீஸ், நிா்மலரசு ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். 17 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் நரேன் குமாா், கிரிஷ்வா்மா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா்.
14 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவில் பிரதிக்ஷா, பிரித்தி ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். 17 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவில் தேவிஸ்ரீ, சஞ்சனா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா்.
19 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் பவித்ரன், நிதீஷ் ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் இரண்டாம் பெற்றனா். இதேபோல மாணவியா் பிரிவில் ஒவியாஸ்ரீ, தீபனா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். மேசை பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வம், புவனேஷ்வரி, திருப்பதி, தினேஷ், பாண்டி, ராஜதுரை, அப்பு ஆகியோரை பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிா்வாக இயக்குநா்கள் வே. தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.