``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
அரூரில் 42 மி.மீ மழை பதிவு
அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 42.2 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மி. மீட்டா் மழையும் பதிவாகியுள்ளது. திடீா் கன மழையினால் விவசாய நிலங்களிலும், சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ஆடிப்பட்டத்தில் நெல் நடவு, மானாவாரியாக அவரை, துவரை பயிரிடுதல் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.