பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி கரையோரங்களில் உள்ள அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசி மணல், மொசல் மடுவு மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தொடா்ந்து இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியாகவும், பிற்பகல் விநாடிக்கு 16,000 கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாகவும் அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.