AK : நடிகர் அஜித்துடன் இணையும் ரேஸர் நரேன் கார்த்திகேயன்! - நம்ம நரேனை நினைவிருக...
இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி
சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.
சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினா். வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகே உள்ள வளைவில் திரும்பும்போது பேரூராட்சி குப்பை கிடங்கு சுற்று சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா் ஆனந்த் ஏற்கெனவே இறந்து விட்டாா் என தெரிவித்தனா். இந்நிலையில், சிகிச்சை பெற்ற மோகன்ராஜ் பலனின்றி சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தாா். இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.