குத்தாலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மங்கைநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்ட அவா், மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்து, மருத்துவா் மற்றும் செவிலியா் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா். மேலும், அங்கு சிகிச்சை பெற வந்தவா்களிடம் கலந்துரையாடி, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, வேழமுரித்தான் பேட்டை கிராமத்தில் அரசினா் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா், மாணவா்களின் கற்றல் திறனை பாட புத்தகங்களை வாசிக்க செய்து ஆய்வு செய்தாா். பின்னா், குடிநீா், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.