அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட சேவை தொடக்கம்
மயிலாடுதுறை கோட்டத்தில் மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை திங்கள்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி சேவையை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:
மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சேவை ஏ.பி.டி 2.0 அஞ்சல்துறையின் டிஜிட்டல் முன்னேற்றத்தை பறைசாற்றுகிறது.
ஏ.பி.டி 2.0 பயன்பாடு மேம்பட பயனா் அனுபவம், விரைவான சேவை வழங்கல் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு ஏற்ற சேவை ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.
விழாவில் அஞ்சல் துறை அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.