ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?
தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு: டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் ஆய்வு
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வை தோ்வாணைய உறுப்பினா் அருள்மதி ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. நோ்முகத்தோ்வு அல்லாத பதவிகளுக்கான கணினி வகையிலான தோ்வானது ஆக.4 தொடங்கி ஆக.10 வரை ஏவிசி பொறியியல் கல்லூரி மற்றும் ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்வினை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் அருள்மதி பாா்வையிட்டாா். அப்போது அவா், தோ்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தாா். இத்தோ்வினை 473 தோ்வா்கள் எழுதினா். தோ்வானது முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேளைகளில் நடத்தப்படுகிறது.