செய்திகள் :

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

post image

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் பிரபலமான க்ரெட்டா எஸ்யூவி 2025ல் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளது.

இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 1,17,458 யூட்னிகள் விற்பனையாகி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து பிரிவுகளிலும் அதிக விற்பனையான மாடலாகவும் இது திகழ்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து விற்பனையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மேலும் இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11.11 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் இயக்குநரும், தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில்,

ஹூண்டாய் கிரெட்டாவின் பத்தாண்டுகளைக் கொண்டாடும் வேளையில், எங்கள் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத அன்பு, நம்பிக்கையைக் கொண்டுள்ளோம்.

ஜனவரி-ஜூலை 2025 காலகட்டத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காராக மாறுவது வெறும் விற்பனை மைல்கல் மட்டுமல்ல; இது பல ஆண்டுகளாக க்ரெட்டா உருவாக்கிய உணர்ச்சிப்பூர்வமான தொடர்பைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் முன்னேறும்போது, வாடிக்கையாளர் அனுபவத்தைத் தொடர்ந்து உயர்த்துவதில் எங்கள் உறுதிப்பாடு உள்ளதாக அவர் கூறினார்.

Hyundai Motor India has achieved another major milestone with its ever-popular Creta SUV. 

ரேஞ்ச் ரோவரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ரேஞ்ச் ரோவர் வேலர் காரில் ஆட்டோபயோகிராபி என்கிற புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இது பெட்ரோல், டீசல் என்ஜின் தேர்வுடன் கிடைக்கிறது. ஆட்டோபயோகிராபியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?எஸ்.இ டைனாமிக் என்கி... மேலும் பார்க்க

6 ஏர்பேக் அம்சத்துடன்.. டொயோட்டா கிளான்சா!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கிளான்சா மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான உபகரணங்களாக 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என அறிவித்துள்ளது. கிளான்சா மாடலின் இ, எஸ், ஜி, வி ஆகிய நான்... மேலும் பார்க்க

ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ்.. ரோல்ஸ் ராய்ஸின் புதிய அறிமுகம்!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் கார் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சொகுசு கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன... மேலும் பார்க்க

கார்களின் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் அதனுடைய கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது.டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் கர்வ் மாடலின் விலையை உயர்த்தியது, தற்போது டியாகோ, கர்வ், டியாகோ என... மேலும் பார்க்க