மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ரேஞ்ச் ரோவரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!
ரேஞ்ச் ரோவர் வேலர் காரில் ஆட்டோபயோகிராபி என்கிற புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இது பெட்ரோல், டீசல் என்ஜின் தேர்வுடன் கிடைக்கிறது.
ஆட்டோபயோகிராபியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
எஸ்.இ டைனாமிக் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ரேஞ்ச் ரோவர் வேலர் கார் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டிலும் கிடைக்கும்.
இந்த காரின் முன்-பின்பக்க பம்பர்களிலும், முன்பக்க பெண்டர்களிலும் பர்னிஷ்டு செய்யப்பட்ட காப்பர் டீடெயிலிங் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க எல்இடி ஹெட்லைட்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய காரில் 20 அங்குல லாய் வீல்களுடன் டார்க் கிரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 11.4 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல ஓட்டுநருக்கான டிஸ்பிளே, 4 நிலை கிளைமேட் கண்ட்ரோல், 3டி சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜி கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை உள்ளன.
மேதில் இதில் நான்கு வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன. ஆரம்ப ஷோரூம் விலை ரூ.89.90 லட்சமாகும்.