வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்
திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ``தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களான திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு பிள்ளை பிடிப்பவர்கள் போல் மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை பிடிப்பதில் மும்முமரமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் முறைகேடுகள். யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமை நிலவுகிறது.

நயினார் நாகேந்திரன் அதிமுக தொண்டராக இருந்து அமைச்சராகவும் இருந்தவர். அவர் பா.ஜ.கவின் தலைவர் ஆன பிறகும் ஜெயலலிதாவின் தொண்டர் என்கிற மனநிலையில் தான் இருக்கிறார் என நான் நினைக்கிறேன். அது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் யாரோடும் ஒப்பிட்டு பேசுவதை ஏற்க மாட்டாரகள். ஓ.பி.எஸ் விலகி செல்வதற்கு காரணமானவர்கள் அவருடன் பேசி சமரசம் செய்து மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் இது தான் எங்கள் நிலைப்பாடு.
பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு நிரந்தரமாக உள்ளனர். அவர்களுக்கு ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை தமிழக அரசு தான் வழங்குகிறது. இதில் என்ன குளறுபடி உள்ளது. இந்தியா எல்லா மாநிலத்தவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய ஒரு நாடு. நம் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் அவர்களுக்கு அந்த மாநிலங்களில் பிரச்னை வந்தால் எப்படி இருக்கும். பீகாரில் இருந்து ஆட்களை ரயிலில் வந்து இறக்கி விட்டு சென்றார்களா. பிழைப்பு தேடி வட மாநிலத்தவர்கள் இருபது வருடங்களாக வருகின்றனர். இந்தியாவில் உள்ள யாரும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் அதை தடுக்க முடியாது.
மற்ற கட்சி தலைவர்கள் ஊர் ஊராக செல்கிறார்கள். நாங்கள் தேவைப்படும் போது மக்களை சந்திப்பு பயணத்தை தொடங்குவோம். பன்னீர்செல்வம் எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறார் 2024 தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். அவர் கூட்டணியை விட்டு விலகியதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். இது போல் நடக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க பார்த்து கொள்ள வேண்டும். மற்றவர்களை பற்றி நான் பேசக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், கூட்டணியை விட்டு யாரும் வெளியேறாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
புதிய கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். கட்சிகளிலிருந்து திமுக கபளீகரம் செய்வதை தடுப்பதற்கு விழித்து கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்கள் அழைக்கின்ற பட்சத்தில் பிரசாரம் செய்வேன். டிசம்பர் மாதத்தில் எந்தெந்த கட்சி, எந்தெந்த கூட்டணி இருக்கிறது என்பது தெரியும். என்.டி.ஏ கூட்டணியில், யார் முதலமைச்சர் என்பதை அமித் "ஷா அறிவிக்கின்ற பட்சத்தில், அதை அமமுக ஏற்கின்ற பட்சத்தில் அவரை ஆதரிப்போம். அமமுகவில் தகுதியானவர்கள் உறுதியாக தேர்தலில் போட்டியிடுவார்கள். சி.வி.சண்முகத்தின் முறையீடு தவறில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அதை விவாதிக்க கூடாது. எல்லா காலத்திலேயும் சில தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது" என்றார்.