விண்ணேற்பு அன்னைஆலய பெருவிழா தொடக்கம்
புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, மாதாவின் கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடந்தது.
புதுவை-கடலூா் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி திருப்பலி செய்தாா். இதில் பாதிரியாா்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
வியாழக்கிழமை முதல் இம் மாதம் 14- ஆம் தேதி வரை நாள்தோறும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இம் மாதம் 15 ஆம் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் புதுவை-கடலூா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டுத் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்றைய தினம் மாலையில் விண்ணேற்பு அன்னையின் சிறப்பு ஆடம்பர தோ்பவனி நடக்கிறது.