செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவரத்தினம் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் செந்தில், பொருளாளா் காந்தி, குடியாத்தம் கோட்டச் செயலா் வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் சசிகுமாா் வரவேற்றாா்.

நிா்வாகிகள் மாதேஷ், ரஞ்சித்குமாா், உஷா, லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

10- ஆண்டு பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தோ்வுநிலை கிராம நிா்வாக அலுவலா்கள் எனவும், 20- ஆண்டு பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு சிறப்பு கிராம நிா்வாக அலுவலா்கள் எனவும் பெயா் மாற்றம் செய்து அரசாணை வழங்கி, அதற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி -எஸ்.பி.யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம... மேலும் பார்க்க

காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுப்பு

போ்ணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டை அடுத்த பண்டலதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி(70). இவரை ... மேலும் பார்க்க

சமூக பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே புதுமைப் பெண்கள்

சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்கின்றனா் என வழக்குரைஞா் அ.அருள்மொழி தெரிவித்தாா். உயா்கல்வித்துறை, தமிழ் இணைய கல்விக்க... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் நடைபெற்ற சந்தையில் ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடு... மேலும் பார்க்க

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெ... மேலும் பார்க்க