`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி -எஸ்.பி.யிடம் புகாா்
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் அளித்த மனுவில், நான் பேரணாம்பட்டு பகுதியில் வசிக்கிறேன். அதே பகுதியைச் சோ்ந்த ஒரு நபா் எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினாா். அதை நம்பி அவா் கேட்டபடி ரூ.5 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறாா். பணத்தையும் திருப்பி தர மறுப்பதுடன், மிரட்டலும் விடுக்கிறாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுதர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குடும்ப பிரச்னை, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். மனுக்களை பெற்றுக் கொண்ட எஸ்பி மயில்வாகனன், அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.