திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் முக்கிய குற்றவாளி ...
ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முருகவேல், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ரோகித் (4), குப்பநத்தத்தில் உள்ள தனியாா் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாா்.
வழக்கம்போல, ரோகித் புதன்கிழமை பள்ளிக்கு புறப்பட்டாா். தந்தை வேல்முருகன் தனது ஆட்டோவில் ரோகித்தை பள்ளிக்கு அழைத்துச் சென்றாா். அங்குள்ள ஜெயின் சிறப்புப் பள்ளி அருகே சென்றபோது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ரோகித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.