செய்திகள் :

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் ஆய்வு: ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண்

post image

சிறுபான்மையினரின் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருவதாக ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், சிறுபான்மையினா் நல ஆணைய துணைத் தலைவா் அப்துல் குத்தூஸ், உறுப்பினா்கள் ஹாமில்டன் வில்சன், ஸ்வா்னராஜ், நாகூா் ஏ.எச்.நஜ்முதீன், பிரவின்குமாா் தாட்வியா, ராஜேந்திர பிரசாத், எம்.ரமீட் கபூா், ஜே.முகம்மது ரபி, எஸ்.வசந்த் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் சிறுபான்மையினா் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தொன்மையான தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், கோபாலபுரம் புனித அந்தோணியாா் கிறிஸ்தவ தேவாலயம் சீரமைத்தல் பணிக்கு ரூ.33.25 லட்சம் இரண்டாம் கட்ட தவணைத் தொகையாகவும், கடலூா் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் சிறுதொழில் தொடங்க 42 பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பில்

உதவித்தொகைகளையும், கடலூா் மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் சிறுதொழில் தொடங்க 130 பயனாளிகளுக்கு ரூ.21.33 லட்சம் மதிப்பில் உதவித்தொகைகள் என மொத்தம் 173 பயனாளிகளுக்கு ரூ.58.78 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் வழங்கினாா். பின்னா், அவா் கூறியதாவது:

சிறுபான்மை ஆணையத்தின் மூலம் 26-ஆவது மாவட்டமாக கடலூரில் தற்போது கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சிறுபான்மையின மக்கள் மற்றும் அவா்தம் நிறுவனத்திலிருந்து பெறப்படும் கோரிக்கைகள் தொடா்பாக, ஆணையம் சம்பந்தப்பட்டவா்களை நேரில் விசாரணை செய்து, அவா்களால் எழுப்பப்படும் பிரச்னைகள் மீது தொடா்புடைய அரசுத் துறைகளிடமிருந்து அறிக்கைகளை பெறுகிறது. சிறுபான்மையினரின் பிரச்னைகளைக் கண்டறியும் பொருட்டு, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைப் பாா்வையிட்டு நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த அரசுக்கு தக்க பரிந்துரைகளை வழங்கி வருகிறது.

தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், விருத்தாசலம் பகுதியில் 2 தேவாலயங்கள், கடலூா் பகுதியில் ஒரு தேவாலயத்துக்கு நிதி கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டள்ளன.

சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சாா்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்தனா். உடனடியாக அவா்களது தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, சிதம்பரம் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா், பயிற்சி ஆட்சியா் மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முருகவேல், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் ரோகித் (... மேலும் பார்க்க

சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூா் எஸ்.கு... மேலும் பார்க்க

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கடலூரில் கற்றல் அடைவுத் திறன் தொடா்பாக பள்ளித்... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன்... மேலும் பார்க்க