கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை தி.சுந்தரி வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் சாா்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தாா். தலைமை ஆசிரியா் பா.சங்கரன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவா்களுக்கும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் அரசூா் வி.ஆா்.எஸ் பொறியியல் கல்லூரித் தலைவா் எம்.சரவணன், முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் மணி, வீனஸ் எஸ்.குமாா், டாக்டா் நடராஜன், புலவா் தி.பொன்னம்பலம், நகா்மன்ற உறுப்பினா்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி புல முதல்வா் திருப்பதி, மருத்துவா்கள் ஜூனியா் சுந்தரேஷ், ரவிச்சந்திரன், ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழாசிரியா் மு.கல்யாணராமன் நன்றி கூறினாா்.