Housemates: "Sivakarthikeyan, Kaali Venkat மாதிரி நடிச்சு காட்டினாரு" - Director...
சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
இந்த அஞ்சல் நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அஞ்சலகத்தில் மின்விசிறி வசதியுடன் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலக தலைமை மேலாளா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் கலைவாணி பங்கேற்று பாலூட்டும் அறையை திறந்து வைத்துப் பேசினாா்.
சிதம்பரம் தலைமை அஞ்சலக உதவி கண்காணிப்பாளா் ஷா்மிளா, அஞ்சலக ஆய்வாளா் குமரவடிவேலு உள்ளிட்ட அஞ்சலகத் துறையினா், தாய்மாா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.