இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய...
ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு
ராஜஸ்தானில் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர்ச் சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 10.7 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவானதாக தேசிய நிலநடுக்க அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கமானது அட்சரேகையில் 24.9 டிகிரி வடக்கு மற்றும் 74.88 டிகிரி கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் என்சிஎஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.