``அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை'' - டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்...
ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மாலுமி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன் பெறவும்.
பணி: Pilot(Contract Basis)
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.1,50,000 - 3,00,000
தகுதி: மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் Foreign Going Ship Pilot பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வெளிநாடுகளுக்குச் செல்லும் கப்பலில் மாலுமியாக பணி அனுபவம் பெற்று நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ennoreport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி விண்ணப்பத்தாரரின் முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 12.8.2025
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Kamarajar Port Limited, No.17, Jawahar Building, 2nd Floor(North Wing), Rajaji Salai, Chennai - 600 001
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.