2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரிலையன்ஸில் பணி!
முன்னாள் அமலாக்கத் துறை அதிகாரி, இந்நாள் ரிலையன்ஸ் நிறுவன பணியாளர் கபில் ராஜ் சமீபத்திய முக்கிய செய்தி.
யார் இந்த கபில் ராஜ்?
2009-ம் பேட்ச் அதிகாரியான கபில் ராஜ், இந்திய வருவாய் துறையில் முன்னர் பணிபுரிந்து வந்தார்.
பின்னர், அமலாக்கத்துறையின் இணை இயக்குநராக பணியாற்றினார்.
இவர் அமலாக்கத்துறையில் இருந்தப் போது டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்காண்டின் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ராஜினாமா
இவர் கடந்த 17-ம் தேதி, ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவில், தான் வகித்து வந்த கூடுதல் கமிஷனர் பதிவை ராஜினாமா செய்தார்.
16 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவரும், இரு முதலமைச்சர்களின் கைதில் முக்கிய பங்காற்றிய கபில் ராஜ், தனது 45 வயதில் அரசு அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட காரணங்களே இவரது ராஜினாமாவிற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்
தற்போது இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக சேர்ந்துள்ளார். அரசு அதிகாரி ஒருவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் சேருவது புதிதல்ல.
ரிலையன்ஸ் நிறுவனத்திலேயே மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் கே.வி.சௌத்ரி பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.