செய்திகள் :

MDMK: ``துரை வைகோ பாஜகவின் ஸ்லீப்பர் செல்'' - மல்லை சத்யா சொல்வதென்ன?

post image

கலைஞர் கருணாநிதியின் 7-வது நினைவு தினமான இன்று கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு கட்சியாகவோ, இயக்கமாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தனிப்பட்ட நபராக கலைஞருக்கு வீர வணக்கம் செலுத்த வந்திருக்கிறேன். ம.தி.மு.க இப்போது இருக்கும் நிலைக்கு நாங்கள் காரணமல்ல.

மல்லை சத்யா
மல்லை சத்யா

கேள்வி கேட்பதற்கு ஆளில்லை என்ற ரீதியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை, பகுதி செயலாளர்களை, ஒன்றிய செயலாளர்களை தூக்கி எறிந்த காரணத்தால் ஜனநாயக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர் துரை வைகோ பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க-வின் இணைக் கட்சி ம.தி.மு.க. எனவே, அந்தக் கடிதத்தில் இந்தியா கூட்டணியின் எத்தனை கட்சிகள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்? ஏன் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்றீர்கள் என்றக் கேள்விகளுக்கு துரை வைகோ பதிலளிக்க வேண்டும்.

ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, நம்முடைய எதிர் கருத்துக் கொண்ட பா.ஜ.க-விடம் கையெழுத்து வாங்கிருப்பதன் மூலம் துரை வைகோவின் முகத்திரை கிழிந்திருக்கிறது. துரை வைகோ 'பா.ஜ.க-வின் தமிழ்நாட்டின் ஸ்லீப்பர் செல்' என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

மல்லை சத்யா - வைகோ
மல்லை சத்யா - வைகோ

அந்தக் கோரிக்கையை அயலக தமிழர்களுக்கென தனி அமைச்சகத்தையே முதன்முதலாக உருவாக்கி, அமைச்சர் நாசரை அதற்கென நியமித்திருக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்திருக்கலாம். அல்லது அமைச்சர் நாசரிடம் கொடுத்திருக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு பிரதமரிடம் முந்திரிக்கொட்டை போல ஓடிச் சென்றதது, துரை வைகோ பா.ஜ.க-வோடு நெருக்கமாக இருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

இன்று மாலை என் அன்புத் தலைவர் வைகோ கலைஞரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகிறார். அவருடைய வருகை உண்மையிலேயே உன்னதமான ஒன்றுதான். கலைஞர் இறந்து 7-வது நினைவு நாளுக்குதான் அவர் ஊர்வலமாக வருகிறார். இதற்கு முன்பு அப்படி வந்ததில்லை.

சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டுமின்றி, இனி ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 7-ம் தேதி இதே போன்று ஊர்வலமாக வரவேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன். கடந்த 25 ஆண்டுகாலமாக வைகோவை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய பெருமை திராவிட கழகங்களுக்கு உண்டு. அதற்கு நன்றி கடனாக அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.

ம.தி.மு.க நிச்சயமாக தலைவர் வைகோவின் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி இருக்குமானால், மாவட்ட செயலாளர்கள் நீக்கமோ, என் மீதான அபாண்ட பழிச்சொல்லோ வந்திருக்காது. இப்போது நடப்பவைகளே, ம.தி.மு.க தலைவர் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கான சான்று.

துரை வைகோ, மோடி
துரை வைகோ, மோடி

கலைஞரிடம், 'உங்களுக்கும், உங்கள் மகன் ஸ்டாலினுக்கும் காலமெல்லாம் ஆதரவளிப்பேன்' என தலைவர் வைகோ கொடுத்த உத்தரவாதம் உண்மையென்றால், கட்சி அவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றால், துரை வைகோ பா.ஜ.க-விடம் கையெழுத்து பெற்றது தவறு என்று அவர் கண்டித்திருப்பார். ஏன் கண்டிக்கவில்லை?

தலைவர் வைகோவுக்கு தி.மு.க கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம். ஆனால், துரை வைகோவுக்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதனால்தான் பா.ஜ.க-வுடன் நெருக்கமாகியிருக்கிறார். கையெழுத்தும் பெற்றிருக்கிறார். இது வெட்கக்கேடு. இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இன்று வரைக்கும் ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியில் அதிகாரப்பூர்வமாக இருக்கிறேன். நானும் வெளியேறவில்லை, அவர்களும் என்னை வெளியேற்றவில்லை. தி.மு.க-வுடன் இணைவதை நான் மட்டும் தனியாக முடிவெடுக்க முடியாது. அதற்கான காலகட்டம், சூழல் ஏற்பட்டால் பார்த்துக்கொள்ளலாம்.

ஸ்டாலின் - மல்லை சத்யா

நாங்கள் கருத்தில் ரீதியாகவே திராவிட சித்தாந்தத்தில் வளர்ந்தவர்கள். எனக்கும் தலைவர் வைகோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு துரை வைகோவால் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை காஞ்சிபுரத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதில் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரிலையன்ஸில் பணி!

முன்னாள் அமலாக்கத் துறை அதிகாரி, இந்நாள் ரிலையன்ஸ் நிறுவன பணியாளர் கபில் ராஜ் சமீபத்திய முக்கிய செய்தி. யார் இந்த கபில் ராஜ்? 2009-ம் பேட்ச் அதிகாரியான கபில் ராஜ், இந்திய வருவாய் துறையில் முன்னர் பணிப... மேலும் பார்க்க

US tariff : ``அமெரிக்காவுக்கு பில்லியன் கணக்கில் டாலர் வருவதை இவர்கள்தான் தடுப்பார்கள்'' - டிரம்ப்

சின்ன வரி விதிப்பு நிறுத்தம், ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, அது, இது என இப்போது மீண்டும் ட்ரம்ப், 'எந்தெந்த நாடுகளுக்கு என்ன வரி?' என்பதை அறிவித்துள்ளார். அதன் படி, இந்தியாவிற்கு 50 சதவிகித வரி பிளஸ் அபரா... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸை பாதிக்குமா டயட்டும் வெயிட்லாஸ் முயற்சிகளும்?

Doctor Vikatan:வெயிட்லாஸுக்கும் பீரியட்ஸ் சைக்கிளுக்கும் தொடர்பு உண்டா, ஒருவர் வெயிட் குறைத்தால் பீரியட்ஸ் வரும் நாள்கள் அதிகரிக்குமா, அல்லது ப்ளீடிங் அளவில் மாற்றங்கள் இருக்குமா? இதை எப்படிப் புரிந்த... மேலும் பார்க்க

இந்தியா அறிக்கை; `ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறதா?' - ட்ரம்ப் பதில் என்ன தெரியுமா?

ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு 25 சதவிகித வரியுடன், அபராதத்தையும் விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ரஷ்யா உடன் இந்தியா வர்த்தகத்தைத் தொடர்ந்து வருவதால்,... மேலும் பார்க்க

ட்ரம்ப் அதிரடி வரி: ரஷ்யாவிற்கு அஜித் தோவல் விசிட்; ஜெய்சங்கரும் ரஷ்யா செல்கிறாரா?

'ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது' - இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டு. இதை காரணம் காட்டி தான், அவர் வரியும், அபராதமும் விதித்துள்ளார். மேலும், கூடுதல் வரி விதிக்க உள்ளதாகவும் தெரிவி... மேலும் பார்க்க

Sydney Sweeney: சர்ச்சையான கவர்ச்சி விளம்பரத்துக்கு ட்ரம்ப் ஆதரவு; பங்கு விலை உயர்வு - என்ன காரணம்?

அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனியின் கவர்ச்சியால் சர்சைக்குள்ளான ஜீன்ஸ் விளம்பரத்துக்கு, அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவளித்துள்ளது பங்குச் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்கன் ... மேலும் பார்க்க