World Breast Feeding Week: சீம்பால் முதல் தாய்ப்பால் அருந்துகையில் குழந்தையின் ம...
ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பாராமெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 93
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி : நர்சிங் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Pharmacist
காலியிடங்கள் : 2
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்று மருந்தாளுநர் பிரிவில் டி.பார்ம் அல்லது பி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Driver (Mobile Medical Unit)
காலியிடங்கள் : 2
சம்பளம் : மாதம் ரூ.9,000
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cleaner Mobile Medical Unit
காலியிடம்: 1
சம்பளம் : மாதம் ரூ.6,500
தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Programme cum Administrative Assistant
காலியிடம்: 1
சம்பளம் : மாதம் ரூ.12,000
தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்புடன் MS Office படித்து ஒரு ஆண்டு Accountant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Occupational Therapist
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 23,000
தகுதி: தொழில் சிகிச்சை பிரிவில் இளங்கலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Health Inspector Gr-II
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: Health Inspector, Sanitary Inspector, Multipurpose Health Worker போன்ற ஏதாவதொரு பணிக்கான படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lab Technician
காலியிடம்: 1
சம்பளம் : மாதம் ரூ. 13,000
தகுதி : +2 தேர்ச்சி யுடன் ஒரு ஆண்டு லேப் டெக்னீசியன்(டிஎம்எல்டி) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Multipurpose Hospital Workers
காலியிடங்கள் : 2
சம்பளம்: மாதம் ரூ.8,500
தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Dental Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 13,800
தகுதி : உயிரியல் பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்று Dental Hygienist படிப்பை முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Executive Secretary, District Health Society, District Health Office, Dharmapuri - 636 705.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 8.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.