செய்திகள் :

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

post image

இந்தியா மீதான கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது வெளியுறவு கொள்கையின் பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்டதால், இந்தியாவுக்கு 25 சதவிகிதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

இதனிடையே, ரஷியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவிக்காததால் ஆத்திரமடைந்த டிரம்ப், அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”7 ஆவது கடற்படை அச்சுறுத்தல் முதல் அணுசக்தி சோதனைக்கான தடைகள் வரை, அமெரிக்காவுடனான எங்கள் உறவை சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

இருநாட்டு உறவுக்கு பேரழிவு தரும் வகையில், டிரம்ப்பின் 50 சதவிகிதம் வரி நடவடிக்கை உள்ளது.

1. இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக கூறியபோது நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். குறைந்தது 30 முறை டிரம்ப் கூறிவிட்டார். தொடர்கிறார்.

2. நவம்பர் 30, 2024 அன்றே பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டினார். அப்போது, மோடி அங்கே அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து, பிரிக்ஸ் அழிந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

3. டிரம்ப் பல மாதங்களாக பரஸ்பர வரி விதிப்பை திட்டமிட்டு வருகிறார். விவசாயம், சிறுகுறு தொழில்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்க மத்திய பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை.

4. மத்திய அமைச்சர்கள் பல மாதங்களாக அமெரிக்காவில் முகாமிட்டு வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகிறார்கள்.

5. 6 மாத கால அவகாசம் இருந்தது, ஆனால், வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த தவறிவிட்டீர்கள். இப்போது டிரம்ப் அச்சுறுத்துகிறார், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ. 7.51 லட்சம் கோடிக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 50 சதவிகிதம் வரி என்றால், ரூ. 3.75 லட்சம் கோடி பொருளாதார சுமை ஏற்படும்.

சிறுகுறு தொழில், விவசாயம், பால் பொருள்கள், மின்னணு பொருள்கள், நகைகள், ஆடை தொழில்கள் மிகவும் பாதிக்கப்படும். மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது எனத் தெரியவில்லை.

இந்த வெளியுறவுக் கொள்கை பேரழிவுக்கு 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீது பழி சுமத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Congress leader Mallikarjun Kharge has criticized the imposition of additional tariffs on India, calling it a foreign policy disaster.

இதையும் படிக்க : இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

25% தாங்காது! மேலும் 25 சதவிகிதமா? டிரம்ப் வரியால் அடிவாங்கும் ஆடைகள், கடல் உணவுகள்... மேலும் என்னென்ன?

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முன்வராததால், இந்தியாவுக்கு அறிவித்த வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்திய பொருள்க... மேலும் பார்க்க

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

குவஹாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்ல... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். தொழிலதிபரான சிராக் புருஷோத்தம், வருவாய் அமைச்சர் ஏ. சத்ய பிரசாத் உடன் திருமலை திருப்பதி தேவஸ்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து! இருவர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் பலியாகியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர், உதம்பூர் மாவட்டத்தின் கட்வாவில் இருந்து பசந்... மேலும் பார்க்க

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வர்!

தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பது தனது பொறுப்பு என்று முதல்வர் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டார். அங்... மேலும் பார்க்க