``அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை'' - டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்...
திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!
திருமலை திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
தொழிலதிபரான சிராக் புருஷோத்தம், வருவாய் அமைச்சர் ஏ. சத்ய பிரசாத் உடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் நன்கொடை காசோலையை வழங்கினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதான அறக்கட்டளை மூலம் மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம் ஏராளமான ஏழைகளின் உயிரைக் காப்பதிலும் திருமலை தேவஸ்தானம் மேற்கொண்ட முயற்சிகளை நன்கொடையாளர் பாராட்டினார் என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயம், சிறுநீரகம், மூளை மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் உன்னத நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு, ஹீமோபிலியா, தலசீமியா மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சைக்கான ஆராய்ச்சியையும் எஸ்.வி. பிராணதான அறக்கட்டளை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.