'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரெப்போ ரேட் விகிதம் 5.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும். அதன்படி, மும்பையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ரெப்போ ரேட் விகிதம் 5.5 என்ற அளவிலும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
பிப்ரவரி முதல் 3 முறை ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5 சதவீதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக அவர் கூறினார்.
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.
வங்கிகள் அளிக்கும் வீட்டுக்கடன், வாகனக் கடன்கள் மற்றும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.