Tourist Family: "நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கும்" - சசிகுமார் குறித்து த்ரிஷா
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான கதையைக் களமாகக் கொண்டிருந்தது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்தைப் பார்த்த பின்னர், படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இதேபோல் நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் படக்குழுவினரைச் சந்தித்து தனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.

'டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம், அதன் உணர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா தற்போது இப்படம் குறித்தும் படக்குழுவினர்கள் குறித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாராட்டியுள்ளார். ”தாமதமாகப் பார்த்தேன்; ஆனால், என்ன ஒரு படம், என்ன மாதிரியான நடிப்பு! சசிக்குமார் சார், நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு வாழும் உதாரணம். திரையிலும் சரி வெளியுலகத்திலும் சரி" என்று குறிப்பிட்டு நடிகை சிம்ரன், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இயக்குநர் எனப் படக்குழுவினரைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...