Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6...
அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு
இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீப நாள்களாக ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறிவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, தனது தேச நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் இறக்குமதி உள்ளதாக ஏற்கெனவே அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மற்ற நாடுகளும் தங்கள் தேசிய விருப்பப்படி வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிலையில், இந்தியாவின் மீது 50% வரி விதிப்பு என்பது துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு,
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை நியாயமற்றது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும், ரஷிய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் ஏற்கெனவே எங்கள் நிலைப்பாட்டை விளக்கிவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்