பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச...
வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது புதியதாக 428 பாதிப்புகள் உறுதியாகியதன் மூலம், நிகழாண்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,812 ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 3 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டில், 2025 ஆம் ஆண்டில் பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 1,259 பேர் தற்போது வங்கதேசத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, 2024-ம் ஆண்டில் வங்கதேச நாட்டில் ஆயிரக்கணக்கான டெங்கு பாதிப்புகள் உறுதியாகியதுடன், 575 பேர் சிகிச்சை பலனின்றி பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!