பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச...
கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!
நடிகை ஷ்ருதி ஹாசன் கூலி படத்தில் தன்னைக் கொலை செய்துவிடுவார்களா என ரசிகர்கள் கேள்வி கேட்பதாகக் கூறியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் கொலை செய்யப்படுவதாகக் காண்பிக்கப்படும் என்ற விமர்சனம் இருக்கிறது.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் ஷ்ருதி ஹாசன் பேசியதாவது:
கூலி படத்தில் நான் ஒப்பந்தம் ஆனதும் ரசிகர்கள் எக்ஸில் (ட்விட்டர்) என் கதாபாத்திரம் கொலை செய்யப்படுமா என கிண்டலாகக் கேள்வி கேட்டார்கள்.
சிலர் நான் சண்டையிடுவேனா எனக் கேட்டார்கள். நான் இந்தப் படத்தில் சண்டையிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஷ்ருதி எனும் கதாபாத்திரத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறேன். முதன்முதலாக கதைக் கேட்கும்போது இதில் எனது கதாபாத்திரத்தை அதிகமான பெண்கள் தொடர்புப் படுத்திக் கொள்ளும்படி இருக்குமெனத் தோன்றியது.
இந்தப் படம் டெஸ்டோஸ்டிரோன் நிறைந்த உலகமாக இருக்கும். இதில் நான் ஆரோக்கியமான ஈஸ்ட்ரோஜனாக இருப்பேன் என்றார்.