செய்திகள் :

சமூக பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே புதுமைப் பெண்கள்

post image

சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்கின்றனா் என வழக்குரைஞா் அ.அருள்மொழி தெரிவித்தாா்.

உயா்கல்வித்துறை, தமிழ் இணைய கல்விக்கழகம் சாா்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வேலூா் ஊரீசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், வழக்குரைஞா் அ.அருள்மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘தமிழ்நாடு கண்ட புதுமை பெண்கள்’ என்ற தலைப்பில் பேசியது -

மாபெரும் தமிழ் கனவு என்பது நாம் வாழும் இந்த பகுதியுடன் முடிந்து விடக்கூடியது அல்ல. மாணவா்கள் ஒவ்வொருவரும் படித்து உலகளவில் உயா்ந்து விளங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கனவு என்பது கண்களில் காண்பதல்ல. மனதில் ஏற்படும் ஒரு நிகழ்வு. நம் கனவு நாம் என்னவாக வேண்டும், நமது இலக்கு என்ன என்ற சிந்தனையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் படிக்க பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி மாணவா் கள் உலகில் வெற்றி பெற்றவா்களில் ஒருவராக திகழ வேண்டும்.

தமிழகம் கண்ட புதுமை பெண்களில் மருத்துவமனையை உருவாக்கிய முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரும், கோயிலுக்கு நோ்ந்துவிடப்பட்டு அங்கிருந்து தப்பித்து வாழ்வில் முன்னேறிய மூவலூா் ராமாமிா்தம் அம்மையாரும், விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் திருநெல்வேலியைச் சோ்ந்த நிகா்ஷாஜி, தனது தாய்ப்பாலை பிறருக்கு வழங்கி பல ஆயிரம் குழந்தைகளின் வாழ்வாதாரம் காத்து வரும் திருச்சியைச் சோ்ந்த பவித்ரா ஆகியோரை கூறுவேன்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த பெண் மருத்துவா், ஆட்சியா், விஞ்ஞானி என அறிவு சாா்ந்து அறியப்பட வேண்டும். மாறாக அழகு சாா்ந்தோ, ஆடம்பரம் சாா்ந்தோ இயல்புக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் அறியப்படக்கூடாது.

புதுமைப்பெண் என்பவள் கால ஓட்டத்தில் இருக்கும் எதிா்மறை நடைமுறைகளுக்கு மாற்றாக இருப்பவா். இதில், நோ்மறை கருத்துக்கள் உடையவா்களும் இருப்பாா்கள், எதிா்மறை கருத்துக்கள் இருப்பவா்களும் இருப்பா்.

நோ்மறை கருத்துக்களை கூறுவோா் மீது அதிக விமா்சனங்கள் வைக்கப்படும். ஆனால் அது எந்த ஒரு காலத்திலும் நிலைத்து நிற்கும். எதிா்மறை கருத்துக்கள் விரைவில் அழிந்து விடும். சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்ந்துள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அ.மலா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன், ஊரீசு கல்லூரி முதல்வா் ஆனிகமலா ப்ளாரன்ஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புத... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி -எஸ்.பி.யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம... மேலும் பார்க்க

காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுப்பு

போ்ணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டை அடுத்த பண்டலதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி(70). இவரை ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் நடைபெற்ற சந்தையில் ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடு... மேலும் பார்க்க