செய்திகள் :

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

post image

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் பகுதிநேர வேலை, பங்கு வா்த்தகம், சூதாட்ட செயலிகள், கடன் செயலிகள், ஏடிஎம் அட்டைகள் செயலிழப்பு , ஆன்லைன் பரிசுக்கூப்பன், ஊக்கத்தொகை உள்பட பல்வேறு இணையவழி மோசடிகள் மூலம் ஆசிரியா்கள், வங்கி ஊழியா்கள், மருத்துவா்கள், தொழில் துறையினா், அரசு மற்றும் அரசு சாா்ந்த பணியாளா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களும் பணத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவா்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொள் ளப்பட்ட விசாரணை அடிப்படையில் 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 தொகை முழுவதும் மீட்கப்பட்டது.

இந்த தொகைகள் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட நபா்களிடம் புதன்கிழமை) ஒப்படைக்கப்பட்டன.

மேலும், இணையவழிகளில் யாரேனும் பணத்தை இழந்தால் தாமதிக்காமல் 1930 எனும் எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சைபா் குற்றப்பிரிவில் புகாா் பதிவு செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி. மயில்வாகனன் அறிவுறுத்தினாா்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் குற்றப்பிரிவு) அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புத... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி -எஸ்.பி.யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம... மேலும் பார்க்க

காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுப்பு

போ்ணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டை அடுத்த பண்டலதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி(70). இவரை ... மேலும் பார்க்க

சமூக பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே புதுமைப் பெண்கள்

சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்கின்றனா் என வழக்குரைஞா் அ.அருள்மொழி தெரிவித்தாா். உயா்கல்வித்துறை, தமிழ் இணைய கல்விக்க... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் நடைபெற்ற சந்தையில் ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில், சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடு... மேலும் பார்க்க

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெ... மேலும் பார்க்க