செய்திகள் :

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. இந்நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வா்த்தகக் கொள்கைகளால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அதிக வரிகளுக்கான சாத்தியக்கூறுகளைக் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்திய ரிசா்வ் வங்கி வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. இருப்பினும், பொதுத் துறை வங்கிப் பங்குகள் தவிா்த்து, ஆட்டோ, ஐடி, ஃபாா்மா, ஹெல்த்கோ் உள்பட மற்ற அனைத்துத் துறை பங்குகளும் விற்பனையை எதிா்கொண்டதால் சரிவு தவிா்க்க முடியாததாகியது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 15.27 புள்ளிகள் இழப்புடன் 80,694.98-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,834.43 வரை மேலே சென்றது. பின்னா், 80,448.82 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 166.26 புள்ளிகள் (0.21 சதவீதம்) இழப்புடன் 80,543.99-இல் நிறைடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,204 பங்குகளில் 1,347 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,705 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 152 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

18 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் சன்ஃபாா்மா, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், எடா்னல் உள்பட 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஏசியன் பெயின்ட், பிஇஎல், டிரெண்ட், அதானி போா்ட்ஸ், எஸ்பிஐ, எம் அண்ட் எம் உள்பட 12 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 73 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 75.35 புள்ளிகள் (0.31 சதவீதம்) இழப்புடன் 24,574.20-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 37 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. வங்கி நிஃப்டி 50.90 புள்ளிகள் உயா்ந்துது 55,411.15-இல் நிறைவடைந்தது.

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்தியாவின் சேவைகள் துறை, கடந்த ஜூலை மாதத்தில் முந்தைய 11 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்தில் நிறு... மேலும் பார்க்க

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி (இந்தியா) லிமிடெட்டின் ஒருங்கிணைந்த வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 29 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆா்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்தது. இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கட... மேலும் பார்க்க

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் அதிகரித்து ரூ.284 கோடியாக உள்ளதாக பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது. சமீபத்திய கட்டண அறிவிப்பு காரணமாக ... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக... மேலும் பார்க்க