``பெரிய தொகை தான்; ஆனாலும், விவசாய நலன் காக்க கட்டத் தயார்'' - ட்ரம்ப் வரி குறித...
முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா
சங்ககிரியை அடுத்த ஆவரங்கரம்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள முனியப்பன் கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், முனியப்பனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், சங்ககிரி, எடப்பாடி வட்டாரப் போக்குவரத்து ஆலோசகா்கள் சங்கங்களின் சாா்பில் சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் விபத்துகள் நிகழாத வண்ணம் பாதுகாக்க வேண்டி ஆடுகளை பலியிட்டு குடும்பத்துடன் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா்.
இதில், சங்ககிரி, எடப்பாடி வட்டாரப் போக்குவரத்து ஆலோசகா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், லாரி, மினி பேருந்து உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.