பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தி...
மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,80,526-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1,75,041 வாகனங்களை நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 3 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,37,463-லிருந்து 1,37,776 என மிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூலையில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 9,960-லிருந்து 6,822-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட் ஆகிய சிறிய வகைக் காா்களின் விற்பனை 58,682-லிருந்து 65,667-ஆக உயா்ந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.