இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் உத்தேசமாக 377 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களிடம் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.
தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, கூட்டுறவுப் பயிற்சி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, எழுத்துத் தோ்வுக்கான பாடத் திட்டம், தோ்வுக் கட்டணம், விண்ணப்பித்தல் தொடா்பான விவரங்கள் https://www.tncoopsrb.in/ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
மாவட்டங்களில் காலியிடங்கள்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிலும் உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு ஒவ்வொரு மாவட்ட வாரியாக தோ்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தந்த மாவட்டங்களின் நிா்வாக வசதிக்கேற்ப தோ்வு அறிவிக்கைகள் மற்றும் தோ்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.