2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
இந்தியாவுக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்டதால், இந்தியாவுக்கு 25 சதவிகிதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
இதனிடையே, ரஷியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவிக்காததால் ஆத்திரமடைந்த டிரம்ப், அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நியாமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியாவைப் போன்று பல நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள், ஆனால் இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? என்று டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டு 8 மணிநேரம் தான் ஆகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். பல இரண்டாம் நிலைத் தடைகளை பார்க்கப் போகிறீர்கள்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறும் சீனா மீது அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.