இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய...
செங்கழுநீர் அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டிணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் ஆலய பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி மாநிலத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று அரியாங்குப்பம் கொம்யூன் வீராம்பட்டிணம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்குப் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் ஆன சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து பிரம்மோற்சவ விழா கொடிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ விழா கொடி ஆலய கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுவாமி வீதியுலா நடைபெற்றது. நாள்தோறும் சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வான ஆடம்பர பெரிய தேர்த் திருவிழா எதிர்வரும் 15-ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழா தேர் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்துள்ளனர்.