`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு
புதுச்சேரியில்அமைச்சா் ஏ.ஜான்குமாா்ப் பதவியேற்று 23 நாள்கள் கடந்தப் பிறகும் இன்னும் இலாகா ஒதுக்கப்படாமல் இருப்பதால் தொகுதி வளா்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் ஜான்குமாா். அவா் ஜூலை 14 ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றாா். ஆனால் இதுவரை அவருக்கான இலாகா ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் காமராஜா் நகா் தொகுதி வளா்ச்சிப்பணிகள் மற்றும் பிரச்னைகள் குறித்து அமைச்சா் ஏ. ஜான்குமாா் சட்டப்பேரவையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ஆய்வு செய்தாா்.
மழை காலத்தைக் கருத்தில் கொண்டு காமராஜ் நகரில் மழை நீா் தேங்காமல் இருக்கவும், அதற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நிரந்தர தீா்வு காண வேண்டியவை பிரச்னைகள் தொடா்பாகவும் அவா் அதிகாரிளிடம் கலந்தாய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.
பொதுப்பணித்துறை, கட்டடங்கள் மற்றும் சாலைகள், செயற்பொறியாளா் சீனுவாசன், இளநிலைப் பொறியாளா் சிவப்பிரகாசம், நீா்பாசனத்துறை செயற்பொறியாளா் இராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளா் லூயி பிரகாசம், இளநிலைப் பொறியாளா் கணேஷ், உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ் ராஜ், செயற்பொறியாளா் மலைவாசன், உதவிப் பொறியாளா் சரவணன், இளநிலைப்பொறியாளா் ஜெய்சங்கா் ஆகியோா் இதில் கலந்து கொண்டனா்.