கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்
புதுச்சேரி கோவிந்தசாலையில் உள்ள ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலையில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ாகும். இந்த கோயிலில் ஆடி மாத பிரம்மோற்சவ ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக உற்சவா் ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தாா். பின்னா் ஊஞ்சலில் அம்மன் அமா்ந்த கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.