`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
பழைய இரும்பு கடையில் தீ விபத்து
திருக்குவளை அருகே பழைய இரும்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கொளப்பாடு பகுதியில் தா்மராஜன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகிலுள்ள கீற்றுக்கொட்டகை மற்றும் வைக்கோல்போரில் பற்றி எரிந்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் தீயை அணைத்தனா். இதில், கடையில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. ஆள்கள் யாருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து, வலிவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.