``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்
காவல் அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது, துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளா் கொலை செய்யப்பட்டுள்ளதை சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக நீதியின் முன் நிறுத்தி கடும் தண்டனை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது அவருடைய பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.