``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்
நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஆகஸ்ட் 11- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
முகாமில் நாகை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, கோவை மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பயிற்சி (ஐடிஐ) முடித்த பயிற்சியாளா்களை, தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தோ்வு செய்யவுள்ளன.
இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள் தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 04365 250126 என்ற தொலைபேசி எண்ணிலும், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நாகை (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), என்ற முகவரியில் நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.