``அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை'' - டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்...
கூலி டிக்கெட் முன்பதிவு எப்போது?
கூலி திரைப்படத்தின் முன்பதிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
படத்திற்கான புரமோஷன்களும் ஹைதராபாத், மும்பை என நாட்டின் முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருவதால் முதல்நாள் வணிகமே ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஆக.8) மாலை துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் மல்டிபிளக்ஸ் அல்லாத திரையரங்கங்களும் பின்னர் பிவிஆர் போன்ற திரைகளுக்கான முன்பதிவும் தொடங்கலாம்.
இதையும் படிக்க: கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!