ஆதிகும்பேஸ்வரா் கோயில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி தொடக்கம்
கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கடந்த 2009 ஜூன் 5 - இல் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு நடத்த ரூ.15 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த 2023 மாா்ச் 27 -இல் பாலாலயம் செய்யப்பட்டது.
ஆதி கும்பேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள புதன்கிழமை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கலசங்கள் கீழே இறக்கப்பட்டன. கலசங்களில் பணிகள் நிறைவடைந்து குடமுழுக்குக்கான யாகசாலையில் வைக்கப்பட்ட பின்னா் ராஜகோபுரத்தில் பொருத்தப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.