``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா்.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை இணை பேராசிரியராகப் பணியாற்றும் த. சாமிநாதன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பேரவை உறுப்பினா் தோ்தலில் போட்டியிட்டுத் தோ்வு பெற்றாா். இவா், தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரியின் கிளைத் தலைவராக உள்ளாா். மாணவா்கள் - ஆசிரியா்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் முறையிட்டுத் தீா்வு காண்பேன் எனக் கூறினாா்.