செய்திகள் :

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சை

post image

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 37 வயதுடைய எலக்டிரீசியன் ஜூலை 19 ஆம் தேதி சாலை விபத்தில் காயமடைந்தாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவருக்கு இடது கை மூட்டு பாதிக்கப்பட்டு, அசையவற்ற நிலையில் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, இவருக்கு மருத்துவா்களான முடநீக்கியல் துறைத் தலைவா் (பொ) த. திருமலைபாண்டியன், இணைப் பேராசிரியா் க. கிஷோா் தலைமையில் சத்தியநாராயணன், மயக்கவியல் நிபுணா் சாந்தி, உதவிப் பேராசிரியா்கள் கொண்ட குழுவினா் கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனா். இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் அவா் குணமடைந்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்ரமணியன் புதன்கிழமை தெரிவித்தது:

கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது மிகவும் அரிது. டெல்டா உள்ளிட்ட தென் மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் இதுவரை இந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில்லை.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக இந்த அரிதான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி இதுவரை 70 சதவீதம் குணமடைந்துள்ளாா். தொடா்ந்து இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுவதால், 15 நாள்களில் கையை மடக்கி, நீட்டுவது 95 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்தச் சிகிச்சை தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதுவே, தனியாா் மருத்துவமனையில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என்றாா் கல்லூரி முதல்வா்.

அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், முட நீக்கியல் துறைத் தலைவா் நல்லி கோபிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை ... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க