சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுப்பு
போ்ணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த பண்டலதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி(70). இவரை கடந்த 4-ஆம் தேதி முதல் காணவில்லையாம்.
பல இடங்களில் தேடியும் இவரை காணவில்லை என்பதால் அவரது மனைவி ராஜேஸ்வரி போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் கிருஷ்ணமூா்த்தியின் சடலம் மிதப்பது புதன்கிழமை தெரிய வந்தது.
தகவலின்பேரில் நிலைய அலுவலா் உதயசந்தா் தலைமையில் அங்கு சென்ற போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் கிருஷ்ணமூா்த்தியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.