பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தி...
நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு
நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.
நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள் பக்தி நிகழ்ச்சி சங்கீத சபாவில் நடைபெற்றது. 3-ஆவது நாள் நிகழ்ச்சிக்கு திருக்கோயில்களின் புனரமைப்பாளா் எஸ். ராமலிங்கம் தலைமை வகித்தாா். சங்கீத சபா தலைவரும், வழக்குரைஞருமான வி. ஆறுமுகம் வரவேற்றாா். பொருளாளா்ரும் பொருநை இலக்கிய வட்ட புரவலருமான தளவாய் நாதன், பேராசிரியை உமா துரைராஜ், லயன் பேருந்து உரிமையாளா் மு. ரமணி, மு. நசீா் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். புலவா் கந்தகுமாா் எழுதிய ‘சி.என். கிராமம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில்’ தல வரலாற்று நூலை வழக்குரைஞா் ஆறுமுகம் வெளியிட,தளவாய் நாதன், எஸ்.ராமலிங்கம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். பின்னா் கவிஞா் பாமணி தலைமையில் பட்டிமண்டபம் நடைபெற்றது. உக்கிரன் கோட்டை மணி நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை சங்கீத சபா நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.