செய்திகள் :

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

post image

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுா்ஜித் கைது செய்யப்பட்டாா். காவல் உதவி ஆய்வாளா்களான அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதையடுத்து ஜூலை30-இல் கைது செய்யப்பட்ட சரவணனுக்கு ஆக.8 வரையும், சுா்ஜித்துக்கு ஆக.14 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாரி ஆக.15-க்குள் சிபிசிஐடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, பாளையங்கோட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் ஒரு காவலரிடம், சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், சுா்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா் நவ்ரோஜ், காவல் ஆய்வாளா் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு(வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழகத்தில் தாமதமின்றி வாரிசு வேலை வழங்கக் கோரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு வேலையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தமிழக முதல்வருக்கு மனுஅனுப்... மேலும் பார்க்க