பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தி...
இருங்காட்டுக்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இருங்காட்டுக்கோட்டை, பென்னலூா் பகுதி மக்களுக்காக நடைபெற்ற முகாமுக்கு, இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கல்பனா யுவராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து, சுமாா் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.